21:50
தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான பேட் மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்ச த்திர வீராங்கனையான சாய்னா நெக்வால் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இது பற்றிய விபரம் வருமாறு -
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் ஒன்றான கிராண்ட் பிரிக்ஸ் ஓபன் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக நடக்கும் இந்தப் போட்டி தற்போது காலிறுதிக் கட்டத்தை அடைந்து ள்ளது.கிராண்ட் பிரிக்ஸ் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனைக் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.மகளிருக்கான ஒற்றையைர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நெக்வாலும், ஜப்பான் வீராங்கனையும் மோதினர்.பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், சாய்னா நெக்வால் அபாரமாக ஆடி, 21 - 13, 15 - 21, 21 - 7 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்க னை மித்தானி மினாட்சுவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெ ற்றார்.முன்னதாக நடந்த முதல் கேமில் சாய்னாவின் கையே ஓங்கி இருந்த து. அவர் துவக்கம் முதலே சிறப்பாக ஆடி புள்ளிகள் பெற்று முன்னி லை பெற்றார். இறுதியில் 21 - 13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.பின்பு அடுத்து நடந்த 2 -வது கேமில் ஜப்பான் வீராங்கனை வீறு கொ ண்டு ஆடினார். இந்திய வீராங்கனை கோட்டை விட்டார். இதன் இறு தியில் ஜப்பான் வீராங்கனை 15 - 21 என்ற கணக்கில் வென்றார்.இதனைத் தொடர்ந்து ஆட்டத்தை தீர்மானிக்கும் 3 -வது கேம் நடந்த து. இதில் சுதாரித்து ஆடிய சாய்னா துவக்கம் முதலே கவனமாக ஆடி புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றார். இறுதியில் அவர் 21 - 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.அடுத்து நடக்க இருக்கும் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றில் இந்தி யாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா நெக்வால் சீன வீராங்க னை லி சூயிகுவை சந்திக்க இருக்கிறார். இந்தப் போட்டி சாய்னாவுக் கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
