22:52
"இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் நடக்கும், கிங்ஸ்டன் ஜமைக்கா ஆடுகளம், இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது,'' என, வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஓடிஸ் கிப்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதுகுறித்து பயிற்சியாளர் கிப்சன் கூறியது:சபினா பார்க் ஆடுகளத்தை பார்க்கும் போது இரு அணியினருக்கும் லேசான ஏமாற்றம் தான். ஆனால், எங்களை விட இந்திய அணிக்கு, சற்று அதிக சாதகமாக உள்ளது. போட்டியில் நாங்கள் முன்னிலை பெறுவதற்கு தேவையான அனைத்தையும் முயற்சிக்கிறோம். ஆனால் எங்களது பேட்டிங் தான் பெரும் பிரச்னையாக உள்ளது. பேட்ஸ்மேன்கள் இந்திய அணியை விட அதிக ஸ்கோர் எடுக்க முடியாமல் திணறுகின்றனர். இருப்பினும், முதல் இன்னிங்சில் ரெய்னா, ஹர்பஜன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே, போட்டியின் திருப்பு முனையாகி விட்டது. தவிர, இரண்டாவது இன்னிங்சில் டிராவிட் கொடுத்த "கேட்ச்சை' தவற விட்டதும் ஏமாற்றம் தான். தற்போதைய நிலையில் இந்திய அணியின் கை ஓங்கி தான் உள்ளது. இருப்பினும், எங்களது பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு, இந்திய வீரர்களை விரைவில் அவுட்டாக்கினால் நல்லது. இரண்டாவது இன்னிங்சில் 250 முதல் 280 ரன்கள் இலக்கு என்றால், எங்களது வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு கிப்சன் கூறினார்.

