22:54
இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் வெற்றி பெற்றார்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தா நகரில், இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் "நடப்பு சாம்பியன்' இந்தியாவின் செய்னா நேவல், பல்கேரியாவின் லிண்டா ஜீசிரியை சந்தித்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செய்னா 21-12, 21-10 என்ற நேர் செட்டில் சுலபமாக வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் செய்னா, மற்றொரு பல்கேரிய வீராங்கனை பெட்யா நீடல்சேவாவை எதிர்கொள்கிறார்

