01:06
-இலங்கை மற்றும் வோஸ்டர்ஷயர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியில் சனத் ஜயசூர்ய மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோரின் அதிரடியில் இலங்கை 57 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.வொர்ஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் கண்டம்பி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 351 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மஹெல ஜயவர்தன 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இன்னுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜயசூர்ய 10 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 78 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
மேலும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் சந்திமால் எவ்வித ஓட்டமும் பெறாது ஆட்டமிழக்க, கண்டம்பி 35, மெத்யூஸ் 81, ஜீவன் மெண்டிஸ் 99, குலசேகர 13 ஓட்டங்களை பெற்றனர்.
வோஸ்டர்ஷயர் அணியின் பந்து வீச்சில் சீட் அஜ்மல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 352 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய வோஸ்டர்ஷயர் அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது.
அணியின் துடுப்பாட்டத்தில் எம்எம் அலி 136, மெமரூன் 65 ஓட்டங்களை பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில், மாலிங்க, அஜந்த மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ஜயசூர்ய 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ,
