22:30
இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்கா தீவில் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பா ர்க்கில் வரும் திங்கட்கிழமை துவங்க இருக்கிறது.
இந்த டெஸ்டிற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வரு கின்றனர். ஏற்கனவே சென்ற வீரர்களுடன் இணைந்து மூத்த வீரர்களான கேப்டன் தோனி, ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோரும் பயிற்சியில் பங்கு கொண்டனர்.
ஆனால் குஜராத்தைச் சேர்ந்த மிதவேகப் பந்து வீச்சாளரான முனாப் படேல் இந்திய வீரர்களுடன் பயிற்சியில் பங்கு கொள்ளவில்லை. அவர் காலரியில் இருந்தவாறு பார்த்துக் கொண்டு இருந்தார்.
முன்னணி வீரரான படேல் பயிற்சியில் ஏன் பங்குகொள்ளவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளரான டன்கன் பிளட்சரிடம் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
கடந்த வியாழக் கிழமை அன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. இதிலும் மித வேகப் பந்து வீச்சாளரான முனாப் படேல் கலந்து கொள்ளவில்லை.
பயிற்சி ஆட்டத்தில் படேல் பங்கேற்காததற்கு விளக்க மளிக்க மறுத்த ஜிம்பாப்வேயைச் சேர்ந்த பயிற்சியாளர் டன்கன் ஒன்றை மட்டும்தெரி வித்தார். அதாவது முதல் டெஸ்ட் போட்டிக்கு முனாப் படேல் உடல் தகுதி பெறுவார் என்பது தான் அது.
இந்திய அணி சார்பாக சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற படேல் அதில் சிறப்பாக பந்து வீசினார். இந் திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
தவிர, கடந்த வாரம் முடிவடைந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் அவர் நன்கு பந்து வீசி தனது திறனை நிரூபித் தார். 3 போட்டியில் கலந்து கொண்ட அவர் மொத்தம் 8 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் சராசரி 17.75 ஆகும்.
இந்திய அணியின் நம்பர் - 1 வேகப் பந்து வீச்சாளராக இருப்பவர் ஜா ஹிர்கான். அவர் பந்துகளை ஸ்விங் செய்வதில் தேர்ச்சி பெற்றவர். அவருக்கு அடுத்தபடியாக படேலும் ஸ்விங் பந்துகளை வீசுவதில் கெட்டிக்காரர்.
