17:08
டெஸ்ட் கிரிக்கெட்டில் திராவிட் 150 போட்டிகளில் 52.44 என்ற சராசரியுடன் இதுவரை 12இ063 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 10 டெஸ்ட் அணிகளுக்கு எதிராகவும் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தற்போது தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட் இருப்பது பற்றி தெரிவித்த ராகுல் திராவிட்இ அதற்கு முழு மூச்சுடன் தயார் செய்து வருவதாகத் தெரிவித்தார். "நான் போதுமான அளவுக்கு விளையாடியிருக்கிறேன் என்றாலும் இன்னமும் அழுத்தம் உள்ளதுஇ இன்னமும் நடுக்கம் உள்ளதுஇ வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் கலக்குகின்றன. இவையெல்லாம் மாறதவை. துவக்கத்தில் ரன்களை எடுக்கத் தொடங்கி ஃபார்மை அப்படியே தொடரவேண்டும். தோனி போன்ற ஒரு கேப்டனை இந்திய அணி பெற்றது அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும் எந்த நெருக்கடியிலும் அவர் கூலாக இருப்பது அவரது அபாரமான குணாதிசயம். சபைனா பார்க் மைதானத்தில் சுனில் கவாஸ்கர் சதங்களை எடுப்பதை வானொலி வர்ணனையில் கேட்கும்போது நாமும் இந்த மண்ணில் விளையாட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். அதுவும் அந்த பயங்கரமான வேகப்பந்து வீச்சாளர்களை அவர் விளையாடியபோது நாமும் இங்கு விளையாட வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.
