17:05
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக விளையாடியவர்.
41 வயதை கடந்த இவர் கடந்த ஜூன் 2005ல் தனது மனைவியான சிமோன் கல்லாஹனை விட்டு பிரிந்தார். பின்னர் ஹாலிவுட் நடிகையும், இந்திய நாட்டை சேர்ந்த அருண் நய்யாரின் முன்னாள் காதலியுமான எலிசபெத் ஹர்லியுடன்(வயது 46) தனது நட்பை புதுப்பித்து கொண்டார்.
அருணுடனான தனது தொடர்பை முற்றிலுமாக முறித்து விவாகரத்து பெற்று விட்ட ஹர்லி தற்போது நிரந்தரமாக வார்னேவுடன் அவரது வீட்டில் குடியேற உள்ளார்.
இந்நிலையில் தனது காதலிக்கு நிகராக வார்னே தோல் சுருக்கம் நீங்கி முகப்பொலிவு பெறுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பற்றி டிவிட்டர் இணையதளத்தில் அவரது ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் வார்னே,"அவ்வாறு எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை" என மறுத்துள்ளார்.
