02:10
எனினும் யூ.டி.ஆர்.எஸ் முறை கூடாது என்ற தனது நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம்(பி.சி.சி.ஐ) கூறியுள்ளது.
முன்னதாக உலகக் கோப்பையின் போது சச்சின், கப்டன் தோனி ஆகியோர் யூ.டி.ஆர்.எஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் சச்சின் யூ.டி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தி அதன் மூலம் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த அவுட்டில் இருந்து தப்பினார் என்பது நினைவுகூரத்தக்கது.
இது தொடர்பாக இ.எஸ்.பி.என் கிரிக்இன்போ இணையதளத்தில் சச்சின் மேலும் கூறியிருப்பது: யூ.டி.ஆர்.எஸ் முறை வேண்டாமென்று நான் கூறவில்லை. ஆனால் அதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முடிவுகளைத் துல்லியமாக தெரிவிக்க வேண்டுமென்றே கூறுகிறேன்.
"ஸ்னிகோ மீட்டர்", "காட் ஸ்பாட் டெக்னாலஜி" ஆகியவற்றை பயன்படுத்தினால் முடிவுகளை மிகவும் துல்லியமாகப் பெற முடியும். இதுவே சரியான தீர்ப்பை அளிப்பதாகவும் இருக்கும் என்று சச்சின் கூறியுள்ளார்.
யூ.டி.ஆர்.எஸ் முறையை எதிர்க்கவில்லை என்று சச்சின் கூறியுள்ள போதிலும் பி.சி.சி.ஐ தனது எதிர்ப்பைக் கைவிடவில்லை. சச்சின் அல்லது வேறு எந்த வீரர் கூறினாலும் யூ.டி.ஆர்.எஸ் முறைக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை.
"பந்தை பின்தொடரும்" தொழில்நுட்பத்தில் வாரியத்துக்கு நம்பிக்கையில்லை என்று பி.சி.சி.ஐ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
