02:08
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் எனது ஆட்டம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இந்திய அணியின் கப்டன் ரெய்னா கூறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றுள்ள போதிலும் ரெய்னா சரியாக விளையாடவில்லை. 5 ஆட்டங்களில் வெறும் 82 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். சராசரி 20.50.
ஜந்தாவது ஆட்டத்தில் தோல்வியடைந்த பின் இது குறித்து ரெய்னா கூறியது: முதல் இரண்டு ஆட்டங்களில் நான் நன்றாக விளையாடினேன். ஆனால் அடுத்த 3 ஆட்டங்களிலும் நான் சரியாக விளையாடவில்லை.
அதுவும் ஜந்தாவது ஆட்டத்தில் இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனது மன்னிக்க முடியாத விடயம் தான்.
சரியான ஷாட்களை நான் விளையாடவில்லை. பயிற்சி போட்டி திங்கள்கிழமை தொடங்க இருக்கிறது. அதற்கு முன் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு எனது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பார்த்திவ் படேல் ஆகியோரது துடுப்பாட்டமும், அமீத் மிஸ்ராவின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. இதனால் தொடரை வெல்ல முடிந்தது. புதிய களத்தடுப்பு பயிற்சியாளர் பென்னி வந்த பின் களத்தடுப்பிலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று ரெய்னா கூறினார்.
