23:01
இந்தச் செய்திகளுக்கு தற்போதைய இந்திய அணியின் கப்டனாக உள்ள ரெய்னா கடுமையாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும் போது பலர் என்னுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர். இதுபோன்று எத்தனையோ பேர் போட்டோ எடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் எல்லாம் யார், யார் என்று எனக்குத் தெரியாது. நானும் யார் என்று பார்த்துக்கொண்டிருப்பதில்லை.
இந்நிலையில் எனக்கும் சூதாட்டக் கும்பலுக்கும் தொடர்பென்று செய்திகள் வெளியிடுவது முட்டாள்தனமானது. தவிர அன்றைய தினம் நான் எனது முகாமையாளருடன்தான் கோயிலுக்குச் சென்றிருந்தேனெனவும் தெரிவித்தார்.
