15:46

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் கப்டனாக ராஸ் டெய்லர் நியமிக்கப்பட்டப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை தோல்விக்குப் பின்னர் கப்டன் பதவியில் இருந்து டேனியல் வெட்டோரி விலகியதைத் தொடர்ந்து அப்பதவிக்கு ராஸ் டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ராஸ் டெய்லரும், பிரண்டன் மெக்கலமும் கப்டன் பதவிக்கான போட்டியில் இருந்தனர். ராஸ் டெய்லரின் பெயரை நியுசிலாந்து கிரிக்கட்டின் இயக்குனர் ஜான் பச்னன், தேசிய பயிற்சியாளர் ஜான் ரைட் மற்றும் தேசிய தேர்வுக் குழு மேலாளர் மார்க் கிரீட்பேட்ச் ஆகியோர் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து அவரை நியூசிலாந்து கிரிக்கட் வாரியம் ஒரு மனதாகத் தெரிவு செய்தது.
