15:45

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுலாவின் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (இலங்கை கிரிக்கெட் சபை) இடைக்கால நிர்வாகக்குழு கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் பல வருடங்களாக இடைக்கால நிர்வாகக் குழுக்களினால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. 3 மாதங்கக்குள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தலை நடத்துவது குறித்து ஆராயுமாறு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
