06:10
வெனிசுலா மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி, கொல் கத்தாவில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.இதற்காக செலிபிரிட்டி மேனேஜ் மெண்ட் குழுமத்தின் தலைவர் பஸ்வாஸ் கோஸ்வாமி அர்ஜென்டினா செல்கிறார். அழைப்பை மரடோனா ஏற்றுக் கொள்வார் என நம்புவதாக கோஸ்வாமி தெரிவித்தார்.
