06:08
அமெரிக்காவில் தங்க கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் மெக்சிகோ கால்பந்து வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து ஊக்க மருந்து சாப்பிட்ட கோல் கீப்பர் குல்லிர்மோ ஒச்சாவோ, தடுப்பு ஆட்டக்காரர்கள் பிரான்ஸ்கோ ரோட்ரிக்ஸ், எட்கர் டுவானஸ் மற்றும் நடுகள ஆட்டக்காரர்கள் அண்டோனியோ நீல்சன், கிறிஸ்டியன் பெர்முட்ஸ் ஆகியோர் போட்டியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
