16:16
சுவிற்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரை வீழ்த்தி, ராஃபெல் நடால் மீண்டும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இன்று பாரீஸில் இடம்பெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ராபெல் நடால் 7/5,7/6,5/7,6/1 என பெடரரை வீழ்த்தினார். இதன் மூலம் 6 வது தடவையாக பிரெஞ்சு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதுடன், மொத்தமாக 10 வது தடவையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்கிறார்.
25 வயதான ஸ்பெயின் வீரரான நடால், இப்போட்டியில் ஆரம்பம் முதலே இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். எனினும் மூன்றாவது சுற்றில் திடீர் வெற்றி பெற்ற பெடெரர் புதிய உற்சாகத்தை கொடுத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக இறுதி சுற்றில் 6/1 என தோல்வி அடைந்தார். இப்போட்டியில் வென்றதன் மூலம் மீண்டும் தன்னை முதல் நிலை வீரராக நடால் நிரூபித்திருக்கிறார்.


