04:49
இங்கிலாந்தின் உள்ளூர் "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்க வகாப் ரியாசிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) அனுமதி அளித்துள்ளது,''பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ். இதுவரை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 49 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இவர், இங்கிலாந்தில் நடக்கும் "டுவென்டி-20' போட்டிகளில் விளையாட, பி.சி.பி., அனுமதி கொடுத்துள்ளது.
இது குறித்து வகாப் ரியாஸ் கூறியது:
இலங்கையில் நடக்கவுள்ள "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்க ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தேன். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் போட்டியில் பங்கேற்க, பி.சி.பி., அனுமதி கொடுத்துள்ளது. இந்த இரண்டு வாய்ப்பையும் பயன்படுத்தி என்னுடைய பந்துவீசும் திறமையை வளர்த்து கொள்வேன்.
இந்த போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப், ரசாக் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு வகாப் ரியாஸ் கூறினார்.
"
