01:17

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கிறிஸ்டன், தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக உள்ளார் எனத் தெரிகிறது.
இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்தவர் தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன். இவரது தலைமையில் இந்திய அணி, சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை தொடருடன், இப்பதவியில் இருந்து விடைபெற்றார். குடும்பத்துடன் நேரத்தை செலவிட இருப்பதால், மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க மறுத்தார்.
தற்போது, கிறிஸ்டன் தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக உள்ளார் என்று தெரிகிறது. இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பு நாளை வெளியாகலாம். துணைப் பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் ஆலன் டொனால்டு தெரிவு செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
முன்னாள் வீரர் வெசல்ஸ் கூறுகையில், கிறிஸ்டன் இந்திய அணிக்காக பயிற்சியாளர் பதவியில், நம்பமுடியாத வகையில் செயல்பட்டு அசத்தினார். இவர் பயிற்சியாளராவது தென் ஆப்ரிக்க கிரிக்கட்டுக்கு நல்ல செய்தி என்றார்
