15:09

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றியீட்டிக் கொண்டது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்கிறது. முதல் போட்டி டிரினாட்டில் இன்று நடந்தது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து போலார்டு நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் அஸ்வினுக்கு பதில் அமீத் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்த களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்ததது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியுள்ள இந்திய அணி 44.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து வெற்றியீட்டிக் கொண்டது.
இதில் சர்மா 68 ரன்களையும் கப்டன் ரெய்னா ஆட்டமிழக்காமல் 43 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
