01:36
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2009-ம் ஆண்டுக்கு பிறகு அவர் 1 நாள் போட்டியிலும் ஆடவில்லை. கடந்த உலககோப்பை போட்டியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
1 நாள் போட்டியில் ஜெயசூர்யா தொடக்க வீரராக இறங்கி கலக்குவது வழக்கம். இலங்கை அணியின் தொடக்க வீரராக உள்ள உபுல் தாரங்கா சூதாட்ட பிரச்சினையில் சிக்கி நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஜெயசூர்யா அணியில் இடம் பெற்று தொடக்க வீரராக ஆட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாட்டுக்காக நான் எப்போதுமே விளையாட தயாராக இருக்கிறேன். தேர்வு குழுவினர் என்னை மீண்டும் அழைத்தால் நிச்சயமாக அணிக்காக சிறப்பாக ஆடுவேன். நாடுதான் எனக்கு முக்கியம். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதில் 100 சதவீத திறமையை நான் வெளிப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

