23:49
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டோனி பயன்படுத்திய மட்டை லண்டனில் திங்கள்கிழமை ஏலம் விடப்படுகிறது.
மட்டை மட்டுமின்றி இறுதிப் போட்டியில் அவர் பயன்படுத்திய கையுறை உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் ஏலம் விடப்படுகின்றன.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பயன்படுத்திய மட்டை என்பதால் அதை ஏலத்தில் எடுக்க கிரிக்கட் ஆர்வலர்கள் ஏராளமானோர் போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கிடைக்கும் நிதி டோனியின் மனைவி சாக்ஷி சிங் ராவத், நடத்தி வரும் அறக்கட்டளைக்கு அளிக்கப்படவுள்ளது. இந்த அறக்கட்டளையில் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.உலகக் கோப்பையில் மற்ற போட்டிகளில் சரியாக விளையாடாத டோனி, இறுதிப் போட்டியில் முன்னதாக களமிறங்கி 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
