
இதுகுறித்து லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிக்கையில் அவர் எழுதியிருப்பது, இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால் களைத்துப் போய்விட்டனர். முக்கியமாக ஐ.பி.எல். போட்டிகளுக்குப்பின் இந்திய வீரர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
ஐ.பி.எல். போட்டிகள் பல புதிய வீரர்களை அடையாளம் காண வாய்ப்பு அளிக்கிறது. ஆனாலும் ஐ.பி.எல்.லில் பங்கேற்கும் பிரபலமான இந்திய வீரர்கள் அடித்து ஆடி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களுக்கு மறைமுகமான நெருக்கடி தான்.
இந்திய வீரர்களின் திறமையில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் முதல்தர அணியான, அவர்களால் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியவில்லை. ஓய்வின்றி விளையாடுவது தான் இதற்குக் காரணம்.
ஓய்வில் இருந்து திரும்பியுள்ள ராகுல் டிராவிட், இஷாந்த் ஷர்மா, பிரவீண் குமார் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடியுள்ளனர். ஆனால் மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜாகீர்கான் பந்து வீசாதது பெரிய இழப்பு என்று நாசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.