
நியூ சௌத் வேல்ஸ் சட்ட வல்லுனர் அமைப்பும் , பெண் சட்ட வல்லுனர் சங்கமும் இணைந்து வழங்கும் சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது 2011 க்காக வழக்குரைஞ்சர் டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன் தெரிவாகி உள்ளார். இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞ்சருக்கு இவ் விருது பரிந்துரை செய்யப்பட்டிருப்ப்பது இதுவே முதல் முறையாகும். வழக்குரைஞ்சர் டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன், 2009 ஆண்டில் இது போலவே சிறந்த சட்ட சேவைக்கான ஜஸ்டிஸ் விருதுக்குத் தெரிவாகிய முதல் தமிழ்ப் பெண்ஆவார்.வழக்குரைஞ்சர் டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யண் பிளக்டவுன் சிட் வெஸ்ட் பல்லின பல் கலாச்சார சேவை நிலையத்தில் இலவச சட்ட சேவையை வழங்குகிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் பத்திரிகையாளராகவும், ஊடகத் துறையில் ஆய்வாளராகவும்,சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் பணி செய்தவர். 1989 இவர் எழுதிய' மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்' என்ற நூலுக்குத் தமிழக அரசு விருது கிட்டியுள்ளது இதுவரைபத்துக்கும்மேற்பட்டநூல்களைஎழுதியுள்ளார்.1997 இல் சிட்னிக்குப் புலம் பெயர்ந்த பின்னர், புலம் பெயர்ந்தவர்க்கான சேவை நிலையங்களில் பணி புரிந்தார். பின்மைக்ரொசொஃப்ட் அங்கீகரிக்கப்பட்ட கம்ப்பியுட்டர் மென்பொருள் பணி பயிற்சியாளராகவும் ,இரட்டை கலாச்சாரத் துறையில் சிறப்பு பயிற்சியாளராகவும் பணி புரிந்த பின் சமூகத்தில் பெண் வழக்குரைஞ்சர் தேவையை உணர்ந்து சட்டம் பயின்றார்.தற்போது பரமற்றாவில் சக்ஸஸ் லாயர்ஸ் அண்ட் பர்க்ச்ஸ்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரிகளில் சட்ட ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.இவரது சோமா இலவச சட்ட சேவை அமைப்பு மூலம் வாரம் தோறும் இலவச சட்டச்சேவையை மேற்கு சிட்னி வாழ் புலம் பெயர்ந்த மக்களுக்காக செய்து வருகிறார்.பெண்களுக்கு சட்டத்துறையின் மூலம் சிறந்த சேவை, பயிற்சி மற்றூம் உதவிகளை வழங்கும்தனிதிறமைக்காக இவ் விருது இவருக்கு வழங்கப்படுகிறது. அவரது முயற்சிகள் தமிழ்ர்க்கெல்லாம் முன்னோடி ஆகும்.