
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் 2வது போட்டி இன்று (06.09.2011) நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 187 ஓட்டங்களைப் பெற்றது. இதில் றாகனே அதிகமாக 59 ரண் எடுத்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 22.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தனர். இதில் குக் பெரிய வான வேடிக்கையை நிகழ்த்தி 88 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.
முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இப் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றமை ஒருநாள் தொடரிலும் வெள்ளையடிக்கப்படும் தோல்வியை அடையப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எப்படி இருந்த இந்தியா இப்படி ஆகிவிட்டதே?