

ஏப்ரல் 2ஆம் தேதி இலங்கையை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியதையடுத்து பி.சி.சி.ஐ. தலைவர் ஷஷான்க் மனோகர் வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார்.
பயிற்சியாளர் உள்ளிட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மூத்த இந்திய வீரர்கள் சிலர் இந்தத் தொகையை ரூ.5 கோடியாக உயர்த்தவேண்டும் என்று கோரியதாக பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"முன்னணி வீரர்கள் மட்டுமே பயனடைகிறார்கள்இ நாங்கள் மற்றவர்களை விட அதிகம் பணம் ஈட்டுகிறோம்இ ஆனால் முனாஃப் படேல் போன்ற வீரர்களின் நிலை என்ன? இந்த வீரர்களால்தான் இந்திய அணிக்கு வருமானம் பெருகுகிறது." என்று மூத்த வீரர் ஒருவர் கூறியதாக முன்னணி பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
"எங்களுக்கு பணத்தாசை கிடையாதுஇ ஆனால் அணியின் ஜூனியர் வீரர்களால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பணம் ஈட்டியதுஇ புகழ் பெற்றது. இந்திய வெற்றிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆயிரம் கோடி ரூபாய்க் கணக்கில் வருவாய் ஈட்டும்போது இந்த ஜூனியர் வீரர்களுக்காக பரிசுத் தொகையை உயர்த்தக் கோருவதில் தவறில்லை. வீரரின் வாழ்க்கை நிச்சயமற்றது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலை உள்ளது." என்று அந்த வீரர் கூறியதாகவும் அந்த செய்தித்தாள் செய்தி தெரிவித்துள்ளது.
மேலும் பயிற்சியாளர்இ உடற்கோப்புப் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை அளிப்பது அவசியம் என்று முன்னணி வீரர்கள் கூறியதாகத் தெரிவித்த அந்தப் பத்திரிக்கை செய்திஇ இவர்கள் அல்லாத சிலர் உதவிக்குழு நபர்களுக்கும் ரூ.50 லட்சம் அளிப்பது என்ற நிலை இருக்கும்போது ஜூனியர் வீரர்களுக்காக நாங்கள் ஏன் அதிகத் தொகை கேட்கக் கூடாது?
ஆனால் கிரிக்கெட் வாரியம் 'இந்த வீரர்களுக்கு அதிகத் தொகை கொடுக்கத்தான் வேண்டுமா' என்றும் ' 1 கோடி ரூபாய் என்பது சிறிய தொகை அல்லவே' என்றும் கூறியதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுள்ளது.