

ஐ.பி.எல். லீக் போட்டியில் நவி மும்பையில் புணே வாரியர்ஸுக்கு எதிராக நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது.
இதில் சென்னையின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயம் காரணமாக விளையாடுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விஜய் தொடர்பாக நாளை முடிவு எடுக்கப்படும் என சென்னை அணி வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் இதுவரை 6 போட்டிகளில் 180 ரன்களை எடுத்துள்ளார். அதாவது சராசரியாக ஒரு போட்டியில் 30 ரன்கள் எடுத்துள்ளார். சிதம்பரம் மைதானத்தில் இதே புணே வாரியர்ஸுக்கு எதிரான போட்டியின் போது விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் முரளி விஜய் களத்தடுப்பு செய்யவில்லை. அந்த போட்டியில் 25 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. விஜயின் இடத்தில் தமிழக ரஞ்சிக் கோப்பை வீரரான அபிநவ் முகுந்த் களத்தடுப்பு செய்தார்.