08:12
பிரபல கால்பந்து வீரர் மரடோனா யு.ஏ.இ கால்பந்து சங்கத்தின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த மரடோனா கடந்த சில மாதங்களாக எந்த அணிக்கும் பணியாற்றாமல் இருந்து வந்தார். இந்நிலையில் யு.ஏ.இ கால்பந்து சங்கம் அவரை தொடர்பு கொண்டு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்தியது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக அச்சங்கத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த மரடோனா நேற்று முன்தினம் யு.ஏ.இ கால்பந்து சங்கத்தின் பயிற்சிக்கான வசதிகளை நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில் யு.ஏ.இ கால்பந்து சங்கத்தின் பயிற்சியாளராக மரடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும் இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
மரடோனா தற்போது அர்ஜெண்டினா சென்றுள்ளதாகவும், அடுத்த மாதம் அவர் துபாய் வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
