01:51
எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எஸ்.எல்.பீ.எல் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 33 வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதல் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எஸ்.எல்.பீ.எல் 20 - 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை 19ம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 4ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
7 மாகாணங்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு அணிக்கு தலா 5 வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்திய அணியின் 12 வீரர்களும் பாகிஸ்தான் அணியிலிருந்து 6 வீரர்களும் அவுஸ்திரேலிய அணியின் 4 வீரர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அத்துடன், நியூசிலாந்து வீரர்கள் இருவரும் பங்களாதேஷ் அணியின் ஒரு வீரரும் இப்போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
