19:22
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது. இந்திய அணி 2ம் இனஸங்ஸ் 94.5 ஓவரில் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 326 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சேமி, பிஷீ தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.326 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்களான அட்ரியன், சிம்மன்ஸ் பொறுப்புடன் விளையாடினர்கள். இந்த ஜோடியை பிரவீண்குமார் பிரித்தார். பரத் 38 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த முன்னணி வீரரான சர்வான் ரன் எதுவும் எடுக்காமல் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆனார். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 262 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 63 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ராகுல்டிராவிட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 252 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார்.
