17:28
ஐ.சி.சி. வாக்கெடுப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடுப்பணைகளை முறியடித்து நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுத் திட்டத்தை முழுதும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரரும் இந்நாள் வர்ணனையாளருமான ஜெஃப் பாய்காட் கூறியுள்ளார்.தனியார் கிரிக்கெட் இணையதளத்தின் வாசகர் கேள்விபதில் நிக்ழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நடுவர் தீர்ப்பு மேல்முறையீடுத் தொழில்நுட்பம் 100% துல்லியமாக இல்லாததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதனை எதிர்த்து வருகிறது. இதற்கு உலக கிரிக்கெட் அணிகள் பலவும் அதிருப்தி வெளியிட்டுள்ளன."ஐ.சி.சி.யின் பெரும்பான்மை உறுப்பு நாடுகள் டி.ஆர்.எஸ். அமைப்பு நல்ல முன்னேற்றம் கொடுக்கும் என்று முடிவெடுக்கையில் இந்தியாவிடம் கூறிவிட வேண்டும், சாரி இந்தியா நீங்கள் சிறுபான்மையாகி விட்டீர்கள்! வாக்கெடுப்பில் உங்கள் தடுப்பு முடிந்து விட்டது என்று கூறவேண்டும். இது ஜனநாயக மரபு, அதாவது பெரும்பான்மை வாக்குகளே தீர்மானிக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் இந்தியாவை புண்படுத்த மற்ற உறுப்பு நாடுகள் விரும்பவில்லை அஞ்சுகின்றன. பெரும்பான்மை டி.ஆர்.எஸ். வேண்டும் என்கிறார்கள் என்று கூறினால் அது இந்தியாவுக்கு பிடிக்காது. ஆனால் கிரிக்கெட்டை ஒரே நாடு நடத்த முடியாது.கிரிக்கெட் விளையையாடும் பல நாடுகள் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிதிப் பலத்தைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே ஐ.சி.சி.யில் இது குறித்து வாக்கெடுப்பு நடக்கும்போது இந்தக் காரணைகளையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டியுள்ளது." என்று பாய்காட் பொரிந்து தள்ளியுள்ளார்.இந்தியாவைக் கண்டு அஞ்சக் காரணம் என்று பாய்காட் கூறும்போது இந்திய அணி பயணம் மேற்கொண்டால் பல நிறுவனங்கள் தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமைகள் கேட்டு வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்கள் பெரிய அளவில் பணம் செலவழிக்கவும் தயாராக உள்ளனர். பிற நாடுகளிடம் அதே அளவிற்கான கொள்முதல் சக்தி இல்லை என்று கூறுகிறார் பாய்காட்.
