00:54
ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கப்டனாக இருந்தார் இந்தியாவின் முன்னனி வீரர் சேவாக். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட இவருக்கு மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது வலி அதிகமானது. இதையடுத்து அவசரமாக லண்டன் சென்றார்.
அங்கு சச்சினின் "டென்னிஸ் எல்போ" காயத்திற்கு அறுவைசிகிச்சை செய்த டொக்டர் ஆண்ட்ரு வாலசை சந்தித்தார். அவரிடமே தனது தோள்பட்டை காயத்திற்கு அறுவைசிகிச்சை செய்து கொண்டார். காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க இயலாத சேவாக், அதற்கு அடுத்து ஜுலை மாதம் நடக்க உள்ள இங்கிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சேவாக் கூறுகையில், "தோள்பட்டை காயத்திற்கு அறுவைசிகிச்சை செய்துள்ளேன். ஆறு முதல் எட்டு வாரத்திற்குள் முழு உடற்தகுதி பெற்று, இங்கிலாந்து தொடரில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
