03:12
தென் ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கட் அணியின் புதிய கப்டனாக தொடக்க வீரர் ஆம்லா, விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ், ஆல்ரவுண்டர் போத்தா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம்.
டுமினி மேலும் கூறியது, ஏற்கனவே கப்டனாக இருந்த கிரீம் ஸ்மித் உலகக் கோப்பையோடு ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த அணியின் புதிய கப்டனாக யார் தெரிவு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கப்டன் பதவிக்கான போட்டியில் ஆம்லா, டிவில்லியர்ஸ், போத்தா ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூன்று பேரில் யார் தேர்வு செய்யப்பட்டாலும், அவர்கள் சிறப்பாக செயலாற்றுவார்கள். மூன்று பேரும் கப்டன் பதவிக்கு தகுதியானவர்கள்.
அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. நிச்சயம் எப்போதும் இல்லாத அளவில் பெரிய மாற்றம் இருக்கும். ஜோகன் போத்தா இருபது ஓவர் போட்டியின் கப்டனாக உள்ளார். அவருடைய தலைமையின் கீழ் இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். அவர் மிகச்சிறந்த கப்டன் என்றார்.
மூத்த வீரரான காலிஸ் கப்டனாக வாய்ப்பு இல்லையா என்று கேட்டபோது, காலிஸ் இப்போது ஓய்வு பெறும் நிலைக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். அதனால் அவர் கப்டனாக வாய்ப்பில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கப்டனாக இருக்கும் ஒருவரையே இப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றார்.
கிறிஸ்டன் பயிற்சியாளராவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, கிறிஸ்டன் தனது குடும்பத்தினருடன் சில காலம் இருக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டேன். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நான் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. ஒருவேளை கிறிஸ்டன் பயிற்சியாளரானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். கடந்த காலங்களில் அவருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்றார்.
