05:47
இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ்ஸிலிருந்து திருடர்களால் சுமார் 700 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பெற்றோல் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிடில் செக்ஸ் பிராந்திய அணியுடனான 3 போட்டியின் பின்னர் ஹோட்டலிருந்து வெளியேறியபோது இப்பெற்றோல் திருட்டு குறித்து இலங்கை அணியினர் அறிந்துகொண்டதாக அணியின் முகாமையாளர் அநுர தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியினர் மேற்கு ட்ரைடன் பகுதியில் கிரவுண் பிளாஸா ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இதனால் இலங்கை அணியின் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த பஸ் கம்பனியினால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனுர தென்னகோன் கூறினார்.
