08:18
ஐ.பி.எல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுவதில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கப்டன் ஷேன் வார்னே தப்பியுள்ளார்.
ராஜஸ்தான் கிரிக்கட் சங்கத்தின் செயலர் சஞ்சய் தீக்ஷித்தை கடும் சொற்களால் விமர்சித்ததாக வார்னே மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தது.
இதனிடையே அவருக்கு ஐ.பி.எல் போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. ஆனால் அவருக்கு 50 ஆயிரம் டொலர்கள் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் கடுமையாக பேசி ஐ.பி.எல் ஒப்பந்த விதிகளை ஷேன் வார்னே மீறியுள்ளார். எனினும் மீண்டும் இத்தகைய செயலில் ஈடுபட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.பி.எல் ஒழுங்கு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார்னே தனது கருத்துக்காக ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவருக்கு தடை விதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
