01:28
இந்நிலையில் நேற்று டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சுரேஷ் கல்மாடிக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்துள்ள ஊழல்களில் சுரேஷ் கல்மாடியே முதல் குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை செய்வதில் வழங்கப்பட்ட காண்ட்ராக்ட்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதற்கெல்லாம் மூலகாரணமாக செயல்பட்டுள்ளவர் சுரேஷ் கல்மாடிதான் என்றும் சி.பி.ஐ. தனது 50 பக்க குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் கல்மாடியே முக்கிய பதவியில் இருந்துள்ளார் என்றும், அனைத்து அதிகாரங்களும் அவரிடமே இருந்துள்ளது என்றும் எனவே அனைத்து காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்துள்ள ஊழல்கள் அனைத்திற்கும் அவரே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 23 ந் தேதி நடைபெறும் என்று சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி தல்வந்த் சிங் தெரிவித்தார்.
