

ஐ.பி.எல்., தொடரில் சமீபத்தில் ராஜஸ்தான் அணியிடம், மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. ஆடுகளம் சரியில்லாததே தோல்விக்கு காரணம் என மும்பை அணி கேப்டன் சச்சின் குறை கூறினார். தவிர, இந்த போட்டியில் தங்கள் அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்றாத, அம்மாநில கிரிக்கெட் சங்க (ஆர்.சி.ஏ.,) செயலர் சஞ்சய் தீட்சித்தை, திட்டிய வார்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே சச்சின் பேட்டிங் குறித்து, சஞ்சய் தீட்சித் தனது "டுவிட்டரில்' கூறுகையில்,"" ராஜஸ்தான் போட்டியில் சச்சின் ஆடுகளத்தை குற்றம் சாட்டினார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இவர், "புல் டாசாக' வந்த பந்தில் தான் அவுட்டானார். இதனால் இம்முறை சச்சின், ஆடுகளத்தை குறை சொல்லக் கூடாது,'' என, கேலியாக தெரிவித்து இருந்தார்.
தீட்சித்தின் இந்தச் செயல், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சாஷாங்க் மனோகரை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. இதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு, தீட்சித்துக்கு பி.சி.சி.ஐ., நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
--