06:09
இலங்கை கிரிக்கட் அணியின் இங்கிலாந்துக்கான சுற்றுத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கான முயற்சிகளை, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.
அதன் பின்னர் இங்கிலாந்து கிரிக்கட் அணியுடன் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்கிறது.
இந்த நிலையில் இந்த தொடருக்காக வரும் இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் வாரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை முன்னதாக பிரித்தானிய தமிழ் இளைஞர் ஒன்றியம் மேற்கொண்டிருந்தது. எனினும் அதன் பின்னர் பிரித்தானியாவை சேர்ந்த பல தமிழ் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை சக்திமயப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கான முயற்சிகளை பிரித்தானிய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக, இலங்கையில் செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் இந்த தகவலை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள குழுவினர் நிராகரித்துள்ளனர்.
