01:24
ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 11 வது "லீக்" ஆட்டத்தில் ராஜஸ்தான் றோயல்சை இன்று எதிர்கொள்கிறது.
அரை இறுதிக்கான வாய்ப்பில் தொடர்ந்து இருக்க சென்னை அணி வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தானை வீழ்த்தி இருந்ததால் சென்னை அணி நம்பிக்கையில் உள்ளது. அந்த போட்டியில் சென்னை அணியின் துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. தொடக்க வீரர் விஜய் மோசமாக ஆடி வருகிறார். அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
7 வது வெற்றியை பெற ஆர்வமுடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த கடுமையாக போராட வேண்டும். ராஜஸ்தான் அணிக்கு அரை இறுதி வாய்ப்பில் இருக்க வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. சென்னை அணிக்கு பதிலடி கொடுக்க அந்த அணி ஆர்வமாக உள்ளது.
கப்டன் வார்னே அந்த அணியின் பந்து வீச்சில் முத்திரை பதித்து வருகிறார். துடுப்பாட்டத்தில் வாட்சன், டெய்லர், போத்தா நல்ல நிலையில் உள்ளனர். ராஜஸ்தான் அணி 10 ஆட்டத்தில் 5 வெற்றியுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. 4 ஆட்டத்தில் தோற்றது. பெங்களூர் அணியுடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
