22:24
ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் இலங்கை அணி "நம்பர்-2' இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இத்தொடரை இலங்கை அணி கைப்பற்றும் பட்சத்தில் ரேங்கிங்கில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
தற்போது ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இலங்கை அணி 118 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (129), இந்தியா (119) அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
ஒருநாள் தொடரை இலங்கை அணி 5-0 அல்லது 4-1 எனக் கைப்பற்றும் பட்சத்தில், ரேங்கிங்கில் தனித்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறலாம். ஒருவேளை 3-2 என இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் பட்சத்தில் 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும். இருப்பினும், சில டெசிமல் புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு பின், இலங்கை அணி இருக்கும்.
தற்போது ரேங்கிங்கில் 5வது இடத்தில் உள்ள இங்கிலாந்து (105) அணி, ஒருநாள் தொடரை 5-0 எனக் கைப்பற்றும் பட்சத்தில் தலா 112 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும். ஒருவேளை இங்கிலாந்து அணி, 0-5 என தொடரை இழக்கும் பட்சத்தில் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் நீடிக்கும்.
