22:04
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ஜூலை 1, 3, 6, 9ம் தேதிகளில் நடக்கவுள்ளது.பிரஸ்னன் வருகை:கெண்டைக் கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் பிரஸ்னன், சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது காயம் குணமடைந்த நிலையில், ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது வருகையால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு வலுவடைந்துள்ளது.இங்கிலாந்து ஆதிக்கம்:இலங்கை-இங்கிலாந்து அணிகள் இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 23, இலங்கை 22 போட்டிகளில் வெற்றி கண்டன. இன்றைய முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் இரண்டு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.

