02:22
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் ஜோகோவிச்சை சந்திக்கிறார்.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-3, 7-6 (3) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கேயல் மான்பில்ய்ஸ் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதிச் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச்சை எதிர்த்து ஆடவேண்டிய இத்தாலியின் பேபியா போகினி காயம் காரணமாக விலகினார். இதனால் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச்சும், பெடரரும் மோதுகின்றனர். ஜோகோவிச் தொடர்ச்சியாக 41 வெற்றிகளை குவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பெடரரை வீழ்த்தும் பட்சத்தில் தொடர்ந்து 42 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் ஜான் மெக்என்ரோஸின் சாதனையை சமன் செய்துவிடுவார். மேலும் தரவரிசையிலும் முதல் இடத்தைப் பிடித்துவிடுவார்.
சமீபத்தில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன், இத்தாலி ஓபன் ஆகிய போட்டிகளில் நடப்புச் சாம்பியன் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
