17:43
உலகக் கிண்ணப்போட்டிகளின் போது ஊக்கமருந்து பாவித்தமைக்காக ஒழுக்காற்று சபையின் விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதனால் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று சபையின் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் சபையின் இறுதி முடிவு வரும் வரை குறித்த காலப்பகுதிக்கு தரங்க போட்டிகள் எவற்றிலும் விளையாட முடியாது எனவும் அதனால் இங்கிலாந்துடனான ஒரு நாள் மற்றும் இருபது-20 போட்டியிலும் இவரது பெயர் இடம்பெறவில்லை. என தகவல்கள் கூறுகின்றன.
தரங்கவும் இல்லையெனில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் இல்லை ஏனெனில் ஏற்கனவே இலங்கை அணியின் தலைவர் டில்சானுக்கு இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் வலது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் தான் ஒரு நாள் மற்றும் இருபது-20 போட்டிகளிலும் விளையாட முடியும என்ற நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் இருவரும் இலங்கை அணி சார்பாக ஆபார ஆரம்பத்தை துடுப்பாட்டத்தை வழங்கியிருந்தனர். மேலும் கடைசியாக இங்கிலாந்தில் 2006 இல் இடம்பெற்ற தொடரில் இலங்கை 5-0 எனக் கைப்பற்றியமைக்கு தரங்க சனத் ஜயசூரியவுடன் இணைந்து பெரியளவில் இலங்கைக்கு பங்களிப்புச் செய்திருந்தார் இதில் தரங்க, சனத் ஆகிய இருவரும் 2 சதங்கள் வீதம் பெற்றிருந்தனர்.
மேலும், தரங்க இல்லாதவிடத்து ஜயசூரியவிற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் இடம்பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். அண்மையில் ஜயசூரிய தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இலங்கை அணிக்காக விளையாடி தனது பலத்ததை நிரூபிப்பேன் என பேட்டியொன்றில் தெரிவிருந்தமை குறிப்பிடத்தக்கது. , , ,
