19:03
ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் ஏகான் கிளாசிக் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் சானியா, ஆஸ்டிரியாவின் தமிராவை சந்தித்தார். இதில் சானியா 3-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
