19:05
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் வெற்றி பெற்றார்.தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில், தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் லான் லுவை சந்தித்தார்.
முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டை 14-21 என கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட செய்னா, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-18 என தன்வசப்படுத்தினார். இறுதியில் செய்னா 21-17, 14-21, 18-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
