01:18
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே இலங்கை கிரிக்கெட்டில் 1992-ல் ஆண்டில் இருந்தே சூதாட்டம் நடைபெற்று வருவ தாக இவர் தெரிவித்தார். புற்றுநோய் போல் சூதாட்டம் பரவி இருப்பதாகவும் கூறி இருந்தார். திலகரத்னே சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக் சேயை சந்தித்து பேசினார்.அப்போது அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர் களின் பெயர் விவரத்தை தெரிவித்ததாக தகவல் வெளியானது. முன்னாள் வீரர்களான அரவிந்த் டிசில்வா, ஜெய சூர்யா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக திலகரத்னே இலங்கை அதிபரிடம் தெரிவித்ததாக இணைய தளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. இதை திலகரத்னே தற் போது மறுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
சூதாட்ட விவகாரம் தொடர்பாக நான் யாருடைய பெயரையும் குறிப்பிட வில்லை.இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்தபோது எனது மனைவி அப்சாரி மற்றும் புத்த மதத்துறவி உதுபே தம்மேலகா உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது எந்த ஒரு வீரரின் பெயர் விவரத்தையும் நான் வெளியிடவில்லை.
இதை முற்றிலும் மறுக்கிறேன். சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு நான் போலீ சாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். இதே போல சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) எனது டெலிபோன் நம்பரை கொடுத்து எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ள லாம் என்று அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
