
22:20
"இந்திய அணியின் இளம் வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக விளங்குகின்றனர்,'' என, பயிற்சியாளர் டிரிவர் பென்னி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் சிபாரிசின் பேரில், பீல்டிங் பயிற்சியாளராக டிரிவர் பென்னி நியமிக்கப்பட்டார். தற்போதைய இந்திய அணி குறித்து பென்னி கூறியது:இலங்கை அணியின் பயிற்சியாளராக டாம் மூடி இருந்த போது, அவருடன் இணைந்து பணியாற்றினேன். தற்போது டங்கன் பிளட்சருடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியிலுள்ள இளம் வீரர்கள் ரெய்னா, பத்ரிநாத், மனோஜ் திவாரி, விராத் கோஹ்லி உள்ளிட்ட நான்கு அல்லது ஐந்து வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுகின்றனர். பயிற்சியின் போது, சிரமமான பந்துகளை கூட எளிதாக "கேட்ச்' செய்கின்றனர். தென் ஆப்ரிக்க தொடர், உலக கோப்பை போட்டி மற்றும் ஐ.பி.எல்., என தொடர்ந்த நீண்ட கிரிக்கெட் பயணத்தில் வீரர்கள் இருந்தாலும், பீல்டிங்கில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுகின்றனர். இவ்வாறு பென்னி கூறினார்.ரெய்னா பாராட்டு:பீல்டிங் குறித்து இந்திய அணி கேப்டன் ரெய்னா கூறுகையில்,"" கடந்த ஐந்து ஆண்டுகளாக அணியில் உள்ளேன். எனது பார்வையில் இப்போதை இந்திய அணி தான் பீல்டிங்கில் அசத்துகின்றது,'' என்றார்.--