04:18
பரணவிதாரன 65 ஓட்டங்களுடனும் குமார் சங்கக்கார 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். எனினும் தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய டில்ஷான் தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 253 பந்தில் 193 ஓட்டங்கள் (2 சிக்ஸர் 20 பவுண்டரி) பெற்ற நிலையில் ஸ்ரீவன் பின்னின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இது டெஸ்ட் இனிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதி கூடிய ஓட்டமாகும். இதற்கு முன் 160 ஓட்டங்களே இவரின் அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது. அதேவேளை, லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் இனிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற இலங்கை வீரராகியுள்ளார் டில்ஷான். இதற்கு முன் 198384 இல் சிதாத்வெத் முனி பெற்ற 190 ஓட்டங்களே லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கையர் ஒருவரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.
முதல் இனிங்ஸில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 372 ஓட்டங்கள் எடுத்த போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மஹேல ஜெயவர்தன (40), சமரவீர(1) களத்திலிருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்ரீவன் பின் 2, டிரம்லட் ஒரு விக்கெட் வீழ்த்தினர். உதிரிகள் வகையில் அணிக்கு 47 ஓட்டங்கள் கிடைத்தன.
