01:51
தாய்லாந்து ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் காத்திருக்கிறார்.தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில், கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா சார்பில் செய்னா நேவல், காஸ்யப், குருசாய் தத், அஜய் ஜெயராம், ருபேஷ் குமார், சனவே தாமஸ், ஜூவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றன.
இந்த ஆண்டு நடந்த சுவிட்சர்லாந்து ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் தங்கம் வென்ற செய்னா, மலேசிய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். எனவே இத்தொடரில் செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று சாதிக்க வாய்ப்பு உள்ளது.
