01:42
இந்தியன் வாலிபால் லீக் 2-வது சுற்று போட்டியில் இன்று சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி கேரள கில்லர்ஸ் அணியுடன் மோதுகிறது.இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில் ஐ.வி.எல். எனப்படும் இந்தியன் வாலிபால் லீக் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.இதில் சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி முதல் 2 போட்டியில் தோல்வி அடைந்தது. நேற்று 3-வது போட்டியில் சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி ஐதராபாத் சர்ஜர்ஸ் அணியுடன் விளையாடியது. இதில் சென்னை அணி 25-16, 25-18, 25-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் கேரள கில்லர்ஸ் அணியும் மராத்தா வாரியர்ஸ் அணியும் மோதியது. இதில் கேரள கில்லர்ஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் கர்நாடகா புல்ஸ் அணி ஏனம் டைகர்ஸ் அணியை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி தனது 4-வது போட்டியில் இன்று கேரள கில்லர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் சென்னை அணி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி மாலை 5 மணிக்கு நடக்கிறது.
