13:41

அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரியம் 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கட் போட்டியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கைகழுவியது.
இந்த தொடர் நீண்ட நாட்களுக்கு நடத்தப்படுவதாக வீரர்கள் ஆட்சேபம் தெரிவித்ததை தொடர்ந்து வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
தற்போது மீண்டும் 3 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி தொடரை அவுஸ்திரேலிய வாரியம் நடத்த தீர்மானித்துள்ளது. வருகிற டிசம்பர் மாதம் இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 பயிற்சி போட்டி, ஒரு 20-20ல் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து 3 நாடுகள் ஒன்டே சீரிஸ் தொடங்குகிறது. 3வது நாடாக இலங்கை பங்கேற்கிறது.
இந்த தொடர் பெப்பிரவரி 5ம் திகதி தொடங்கி மார்ச் 8ம் திகதி வரை நடக்கிறது. மொத்தம் 12 லீக் ஆட்டங்கள், 3 பைனல் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 4 முறை மோதும்.
புள்ளிகள் அடிப்படையில் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். கடைசியாக அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட 3 நாடுகள் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
