19:46
ஏகான் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி முன்னேறியது.லண்டனில், ஏ.டி.பி., ஏகான் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் அரையிறுதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி, கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியை சந்தித்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பயஸ்-பூபதி ஜோடி 6-7, 7-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. பைனலில் இந்திய ஜோடி, அமெரிக்காவின் பாப், மைக் பிரையான் ஜோடியை எதிர்கொள்கிறது.
